கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டு ஆசை வார்த்தைகளை பேசிய ஜனாதிபதி உள்ளிட்ட ஏனையவர்கள் ஆட்சி பீடம் ஏறியதும் மலையக மக்களை மறந்து விட்டார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று (06) மாலை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நோர்வூட் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலய பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் உட்பட மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் விஜயசந்திரன்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் பழனிவேல் கல்யானகுமார் மற்றும் பெருந்திரலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக வரவு செலவு திட்டத்தின் வாசிப்பின் போது இந்த அரசாங்கம் கூறியது ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை.
மலையக மக்கள் குறித்து அனுபவம் உள்ள எங்களது தொழிற்சங்கங்களுக்கு மாத்திரம் தான் அக்கரை உள்ளது புதிதாக வந்த கட்சிகளுக்கு மலையக மக்கள் குறித்து எவ்வித அக்கறையும் கிடையாது.
தேசிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுக்கு மலையக மக்கள் தொடர்பாக அதிகமாக பேச முடியாது தற்போது உள்ள அரசாங்கம் ஊழல் செய்தவர்களை ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பட்டியலை தயார் செய்கின்றனர் மதுபாண சாலைகள் வைத்திருப்பவர்கள் எரிப்பொருள் நிரப்பு நிலையம் வைத்திருப்போர்களை பட்டியலிட்டு ஊழல்வாதிகள் என கூறி விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர் தமிழ் முற்போக்கு கூட்டணியை பொருத்தவரையில் நாங்கள் மக்களுக்கு நேர்மையாக சேவை செய்திருக்கின்றோம் ஆகையால் நாங்கள் சுத்தவாழிகள்
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எவரும் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பணம் செலவு செய்யவில்லை ஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளார்கள்
வாசிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் 4500மில்லியன் ரூபாய் இந்திய அரசாங்கம் கொடுத்த நிதியாகும் மிகுதி எஞ்சியுள்ள 2500 மில்லியன் ரூபா நிதியினை வைத்துக்கொண்டு முழு மலையகத்திற்கும் சேவை செய்வது என்பது கடினமான விடயமாகும்.
-சதீஸ்குமார்