சூடான செய்திகள் 1

ஆசைவார்த்தைகள் காட்டி மாணவிக்கு ஆசிரியர் செய்த சூழ்ச்சி!!!

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11 கல்வி கற்றுவரும் மாணவியை அப்பாடசாலையில் கடமையாற்றிவரும் பெரியநீலாவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய ஆசிரியர் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார் என பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவதினமான நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, தாயார் வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றதனால் பாதிக்கப்பட்ட மாணவி அவரது அம்மம்மாவுடன் வாழ்ந்துவருகின்றார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியர் சிறுமிக்கு கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து அதனூடாக சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி பாடசாலையில் சனி ஞாயிறு கிழமைகளில் நடக்கும் பிரத்தியோக கல்வி நடவடிக்கையின் போது பாடசாலையில் வைத்தும் ஏனைய இடங்களுக்கு வரவழைத்தும் பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்டுவந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைளகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இருவர் கைது

மீனவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…