உள்நாடு

ஆசிரியாரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

(UTV | கொழும்பு) –

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தின் தரம் 4ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனை ஆசிரியை ஒருவர் தடியால் தாக்கப்பட்ட நிலையில் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தரம் 4 வகுப்பறையில் நேற்றைய தினம் ஆங்கில பாடம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேலை அருகில் உள்ள மாணவன் தாக்கப்பட்ட மாணவனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து குறித்த மாணவன் தாக்கப்பட்டதாக பொகவந்தலாவ போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 9 வயது சிறுவனுக்கு வலது கை மற்றும் உடம்பின் பின் பகுதியிலும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கப்பட்டமைக்கான சாட்சியங்கள் சிறுவனின் உடம்பின் பின் புறத்தில் காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது

சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு, மத்திய மாகாண ஆளுநர், மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் செயலாளர், ஹட்டன் வலய கல்வி பணிமனை ஆகியோருக்கு சிறுவனின் பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இந்த சிறுவன் தாக்கப்பட்டமைக்கு சிறுவனை தாக்கிய ஆசிரியையும் பாடசாலையின் அதிபரும் பொறுப்பு கூறவேண்டுமென பெற்றோர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரியவந்துள்ளது இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியையை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ போலீசார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ போலீசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியல் பழிவாங்கல் – இன்று முதல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம் 

‘எரிபொருள் கப்பல் வரும் திகதியினை எம்மால் உறுதி செய்ய முடியாதுள்ளது’

இம்ரான் கான் மாலை இலங்கைக்கு