வகைப்படுத்தப்படாத

ஆசிரியர் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்படும் – கல்வி அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – ஒரு மாத காலத்திற்குள் தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் மேலதிக ஆசிரியர் தொடர்பாக தகவல்களை பெற்று ஆசிரியர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தேசிய பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும்.

தகுதியுடைய மாகாண ஆசிரியர்கள் தேசிய பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார் .

Related posts

மாகாண மட்டத்தில் கல்வி சார்ந்த போட்டியை உருவாக்க வேண்டும் – பிரதமர்

லண்டனில் மற்றுமொரு தாக்குதல்

கொலை குற்றவாளிக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றம்