உள்நாடு

ஆசிரியர் பற்றாக்குறை ஏனைய குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு

(UTV|கொழும்பு)- பொலன்னறுவை மாவட்ட பிரதேசங்களில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்தனர்.

அது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக நேற்று (05) பொலன்னறுவை அத்தனகடவல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சிறியளவில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ள எலஹெர மக்களுக்கு சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் தமது தொழிலை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இந்த மக்கள் சந்திப்பு அபேட்சகர் அமரகீர்த்தி அத்துகோரலவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, பொலன்னறுவை பெந்திவெவவிலும் முன்னாள் பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் கிரித்தலயிலும் ஜி.ஜி.சந்திரசேன மெதரிகிரிய வட்டதாகயவிற்கு அருகிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு மக்களின் விபரங்களை கேட்டறிந்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மொஹான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

நுவரெலியாவில் தபால் நிலைய விற்பனைக்கு எதிராக பாரிய போராட்டம்!

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்