உள்நாடு

ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு மற்றுமொரு குறை

(UTV | கொழும்பு) – 2021 உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்;

“.. ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை இந்த ஆண்டும் வழங்க வேண்டும். அவர்கள் கொடுப்பனவு அதிகரிப்பை எதிர்பார்க்கவில்லை. வினாத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவில் திருத்தம் செய்வது கவலைக்குரியது.

இந்த முடிவை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையர் தெரிவித்திருந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை..” என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சுற்றுநிருபம் இன்று

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்