உள்நாடு

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV| கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர்கள் அடுத்த மாதம் மூன்றாம் திகதியின் பின்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தனியான சம்பள திட்டத்தை தயாரிப்பதற்கும், அதுவரையில் இடைக்கால சம்பளத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பளத்தை அடுத்த மாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கததின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பல்கலைக்கழக நுழைவுக்கான Z புள்ளி இந்த வாரம் வெளியீடு

லங்கா சதொசவில் பொருட்களின் விலை குறைப்பு!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் உயிரிழப்பு