உள்நாடு

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – 2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடத்தப்படவிருந்தது.

குறித்த பரீட்சையை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

Related posts

2024 – வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் இன்று.

நாட்டின் இளைஞர்களைக் கொண்டு விவசாயம் !

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய 260 இலங்கையர்கள்