உள்நாடு

ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்

(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றைய நாளில் பாடசாலைகளில் தடைப்படும் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

இன்சாபுடன் 600 தடவைகள் தொடர்பு கொண்டவர் வெளியே 6 உள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டவர் உள்ளே – ரிஷாத்