உள்நாடு

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

(UTVNEWS | COLOMBO) –எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புத்ததாஸ விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்ட பேரணி இசறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் வரை இடம்பெறவுள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்கள் பல தசாப்த காலமாக நசுக்கப்பட்டு வரும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சு எடுத்த தீர்மானம் – தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தலின் வாக்குறுதியாகவும் மாறியது.

இந்த அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி அதை ஏற்றுக் கொண்டதால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் பொறுப்பில் இருந்து தற்போதைய அரசால் விலக முடியாது.

2019 டிசம்பர் 17 ஆம் திகதி தற்போதைய கல்வி அமைச்சர் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை தொடர்பாக எமது தொழிற்சங்கங்களுடன் உரையாடி 2020.01.21 திகதி அன்று மீண்டும் கலந்துரையாடல் நடந்தாலும் உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் எமது சங்கங்கள் 2020.02.03 முன் உரிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும் அதை வெளியிடாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்தோம்.

Related posts

விளையாட்டுத்துறை வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நியமனம்!

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

மீன்சந்தைகளை மூடுவது அநாவசியமாகும்