வகைப்படுத்தப்படாத

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்க யோசனை

(UTV|COLOMBO)-அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுபடுத்துவது தொடர்பாக டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சாதாரண தானியங்கி துப்பாக்கியை எந்திர துப்பாக்கியாக மாற்றக்கூடிய பம்ப்ஸ்டாக் என்ற கருவியை பயன்படுத்த டிரம்ப் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் பள்ளி துப்பாக்கி சூடு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய டிரம்ப் பள்ளிகளில் துப்பாக்கி சூடு சம்பவம் நடக்காமல் இருக்க இனி ஆசிரியர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் இனி துப்பாக்கி வாங்குபவர்கள் பின்னணி பற்றியும் தீவிரமாக விசாரிக்கப்படும். அவர்களுடைய மனநிலைப் பள்ளி ஆய்வு செய்யப்படும் என்றும் அவர்களிடம் டிரம்ப் கூறினார்.

அப்போது ஒரு மாணவரின் பெற்றோர் நீங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது, துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவாக பேசியதாக குற்றம் சாட்டினார். அதற்கு டிரம்ப் நான் அவ்வாறு ஆதரவாக செயல்படவில்லை என்று கூறினார்.

மற்றொரு மாணவரின் பெற்றோர் துப்பாக்கி சூடு நடப்பதை தடுக்க உரிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று கூறினார். அதற்கு இதுபற்றி ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் உறுதி அளித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

අක්මීමන පාසලකට බලහත්කාරයෙන් ඇතුලුවීමට ගිය පුද්ගලයෙකුට වෙඩි වැදීමෙන් ජිවිතක්ෂයට

மருத்துவமனையில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவில் அதிகரிக்கும் சனத்தொகை