சூடான செய்திகள் 1

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை

(UTV|COLOMBO)-சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கட்டணம் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் சனத் பூஜித்த இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் செலுத்தப்பட்ட அதே கட்டணத்தை ஆசிரியர்களுக்கு செலுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தர விடைத்தாள் திருத்தப் பணிக்காக செலுத்தப்படுகின்ற கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணியில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரண தர கணித பாடத்தின் இரண்டாவது பகுதிக்கு செலுத்தப்பட்ட 90 ரூபாய் கட்டணம் 70 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், தொழிநுட்ப பிரச்சினை காரணமாக 90 ரூபாய் கட்டணம் 70 பதிவாகியிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர்களுக்கு கட்டணம் உரியமுறையில் வழங்கப்படம்பட்சத்தில், தாங்கள் அந்த பணியை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

ஹாபீஸ் நசீருக்கு தவிசாளர் அல்லது ஆளுநர் பதவியா?

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய உத்தரவு