உள்நாடு

ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பமுள்ள அரச சேவையாளர்களுக்கு

(UTV | கொழும்பு) – ஆசிரியர்களாக பணிபுரிய விருப்பமுள்ள அரச சேவையாளர்களை உள்வாங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் காமினி வலேபொட இன்று பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பாரிய பற்றாக்குறை நிலவுவதாகவும், அரச சேவையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் பிரச்சினையும் தீர்க்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் புதிய ஆசிரியர் குழுவை இணைத்துக் கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

editor

மாணவர்களை குழுக்களாக பிரித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க நடவடிக்கை