விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பம்

(UTV | கொழும்பு) –   2022 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி ஆகஸ்ட் 27ஆம் திகதி தொடங்க உள்ளது.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 02 பிரிவுகளின் கீழ் 06 அணிகள் மோதவுள்ளன.

ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆசிய கிண்ண தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணிகள் இடம் பெற்றுள்ளன.

பி பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டியை ஆரம்பித்து இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது போட்டி ஆகஸ்ட் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

பி.எஸ்.ஜி. அணியானது அரை இறுதிக்கு தகுதி

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வெற்றி!