விளையாட்டு

ஆசிய கிண்ணம் 2022 : இலங்கை – இந்தியா இன்று களமிறங்குகிறது

(UTV |  துபாய்) – ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் முக்கியமான போட்டியொன்று நடைபெறவுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேற வேண்டும்.

இதேவேளை, டுபாயில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக, இன்றைய போட்டிக்கு இலங்கை அணி நன்கு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இன்றைய போட்டிக்கு சரித் அசங்கவிற்கு பதிலாக தனஞ்சய டி சில்வாவை இலங்கை அணிக்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் தசுன் ஷானக ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் மிகவும் நல்ல மனநிலையில் இருப்பதாக இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த தசுன், இந்திய அணிக்கு சரியான பந்துவீச்சு படை உள்ளது என்றும் அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றும் கூறினார்.

இதேவேளை, நாளைய போட்டிக்கு இலங்கை அணியும் நன்கு தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சர்வதேச அணிக்கும் எதிரான ஒவ்வொரு போட்டியும் சவாலானது என தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இலங்கை எப்போதும் நல்ல துடுப்பாட்டத்தின் மூலம் ஸ்கோர்போர்டை உயர்த்த முயற்சிப்பதாகவும் தசுன் கூறினார்.

போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கிடையில் உறவை கட்டியெழுப்பிய விதம் ஒரு முக்கியமான காரணி எனவும் இலங்கை அணித்தலைவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இன்றைய போட்டியில் தனஞ்சய டி சில்வா விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பதில் அளித்த தசுன் ஷனக, நாளைய போட்டிக்கு தனஞ்சய டி சில்வா விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அது தொடர்பில் தெரிவுக்குழு தற்போது கலந்துரையாடி வருவதாக தசுன் ஷானக மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதை சுவீகரித்த குரோஷிய அணியின் லூகா

சனத் இனது தடைக்காலம் நிறைவுக்கு

டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி