விளையாட்டு

ஆசிய கிண்ணம்: இன்று பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது

(UTV |  துபாய்) – ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது போட்டி இன்று சாஜாவில் நடைபெறுகிறது. A குரூப் பி போட்டியான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை 08 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் பங்களாதேஷ் அணி விளையாடும் முதல் போட்டி இதுவாகும்.

இதன்படி தற்போது புள்ளிப் பட்டியலில் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.

இந்தப் போட்டியின் முடிவு ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமண்

அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி

ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டு வெற்றியை ருசித்த இந்தியா