விளையாட்டு

ஆசிய கிண்ணம் : ஆப்கானிஸ்தானுக்கு அபார வெற்றி

(UTV |  சார்ஜா) – ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேச அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்களை எடுத்தது.

மொசாடெக் உசைன் 30 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹ்முதுல்லா 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரஹமான், ரஷித் கான் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து, 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கர்பாஸ் 11 ரன்னிலும், ஷஷாய் 23 ஓட்டங்களிலும், கேப்டன் முகமது நபி 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரான் நிதானமாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா சட்ரான் அதிரடியாக ஆடி 17 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 43 ஓட்டங்களை குவித்தார். இறுதியில், ஆப்கானிஸ்தான் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் ஆப்கானிஸ்தான் நுழைந்தது. ஆட்ட நாயகன் விருது முஜிபுர் ரஹ்மானுக்கு அளிக்கப்பட்டது.

Related posts

துனிசியாவை 2-1 என வீழ்த்தியது இங்கிலாந்து

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நியுசிலாந்து

புஜாரா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ்