விளையாட்டு

ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணிக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO)-ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் நேற்று  (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை  சந்தித்தனர்.

போட்டிகளில் திறமையாக விளையாடி தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் இலங்கை வலைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி ,எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றிபெற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அதற்காக அரசாங்கம் சகல அனுசரணைகளையும் வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியும் விளையாட்டுத் துறை அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியுடன் இணைந்து  புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதேநேரம் 2018 உலக கரம் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை ஆண்கள் அணியும் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணியும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
அவர்களது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவர்களோடு  புகைப்படத்திலும் இணைந்து கொண்டார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

தினேஷ் சந்திமால் செய்த காரியம்

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நீல் வக்னர் முன்னேற்றம்