அரசியல்உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிட தூதுக்குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Takafumi Kadono நேற்று (21) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் அபிவிருத்திச் செயன்முறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கிய பங்கு குறித்து இந்த கலந்துரையாடலின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டதுடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமையாக புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்ய பாடசாலைக் கட்டமைப்பு, அதிபர் ஆசிரியர் பயிற்சி மற்றும் மதிப்பீட்டு பொறிமுறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

அதிபர் ஆசிரியர் பயிற்சியை மேம்படுத்துதல் உட்பட, முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் மூலம் கல்வித் துறையில் உள்ள சவால்களைத் தீர்ப்பதில் தங்கள் பங்களிப்பு குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் மேலும் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவே, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பதில் பணிப்பாளர் ரஞ்சித் கருசிங்க, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தனஞ்சி அமரசிங்க மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் லஷிங்கா தம்முல்லகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை