விளையாட்டு

ஆசியக் கிண்ணம் 2022 : சுப்பர் 4 சுற்று இன்று

(UTV |  துபாய்) – ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரில் ஏ குழுவிலிருந்து சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

ஹொங்கொங் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி, 155 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

சார்ஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹொங்கொங் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.

பின்னர் 194 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஹொங்கொங் அணி 10.4 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

இன்றைய தினம் சுப்பர் 4 சுற்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்தச் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

சார்ஜாவில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு ஆரம்பமாக உள்ளது.

முன்னதாக குழுநிலையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை அணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி கண்டிருந்தது.

இதேவேளை ஆசியக் கிண்ண 20 க்கு 20 தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

இலங்கையினை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது