உள்நாடுசூடான செய்திகள் 1

ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு

(UTV| கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட்-19 ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(26) ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு செயலணி ஒன்றுகூடியது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர ஆகியோரும் கொவிட் ஒழிப்பு செயலணியின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!

விபத்தில் காவற்துறை அதிரடி படையில் பணிபுரிந்த உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு