சூடான செய்திகள் 1

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் தேசிய அடையாள அட்டை…

(UTV|COLOMBO)  2019 ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் விநியோகிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரையில் 1 இலட்சத்து 75 ஆயிரம் விண்ணப்பங்கள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் சுமார் 25 ஆயிரம் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு அவர் பாடசாலைகளின் அதிபர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

09 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் விசேட விசாரணை