உள்நாடு

அ.கா.சபை உறுப்பினர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) -இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமி பேரா மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் ஆகியோர் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பில் அரசியல் தற்போதைய நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல் யாப்பு உ ருவாக்கம் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

வாக்குறுதிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்தில் கொடுக்கப்பட்டவை எனவும் தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்கிற காரணத்தினால் வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது என்பதனையும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்க முடியாது என்பதனையும் இரா. சம்பந்தன் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

Related posts

“கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை” கம்பனிகளை எச்சரிக்கும் ஜீவன்

பொலிஸார் மீது மோதி தப்பிச்சென்ற டிப்பர் சாரதி விளக்கமறியலில்

சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு