உள்நாடு

அஹ்னாப் ஜஸீம் தொடர்பில் பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு கடிதம்

(UTV | கொழும்பு) – மாணவர்களுக்கு தீவிரவாத சிந்தனைகளை பரப்பியமை தீவிரவாத கருத்துக்கள் பொதிந்த புத்தகமொன்றை வெளியிட்டமை முதலான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜஸீம் தொடரபாக இன்னும் 8 நாட்களில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளது.

இலங்கை இளம் ஊடகவியலார்களின் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செய்த முறைப்பாட்டின் பின்னர் குறித்த அறிக்கையை கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.

இது தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கத்தினால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடொன்று ஆரம்பத்தில் செய்யப்பட்டு இருந்த நிலையில் இது குறித்த விரிவான ஒரு கடிதத்தை 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதியும் அனுப்பி வைத்திருந்தது.

அஹ்னாப் ஜஸீம் தடுப்பு உத்தரவின் பெயரில் பயங்கரவாத விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை சட்டத்தரணிகளை சந்திக்க விடாமை, தடுத்து வைத்திருந்த நிலையில் எலியொன்று அவரை கடித்தமை ஆரம்பத்தில் அஹ்னாப் ஜஸீம் எழுதிய நவரசம் புத்தகத்தில் தீவிரவாத கருத்துகள் இருந்தாக குறிப்பிட்டே கைது செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவருக்கு எதிராக வேறு வகையில் விசாரணைகள் இடம் பெற்றும் வருவதாகவும் குறிப்பிட்டு குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு 1996 ஆம் ஆண்டு எண் 21 இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் விதிகளின்படி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

சிங்கராஜ என்றால் அபிவிருத்தி – வில்பத்து என்றால் இனவாதம்

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்