உள்நாடு

அஹிம்சாவழிப் போராட்டத்திற்கு தயாராகுங்கள் – சாணக்கியன்.

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் விஜயத்தின்போது பாரிய அஹிம்சாவழிப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். மயிலத்தமடு மேய்ச்சல்தரை அபகரிப்புக்கு எதிர்ப்புப் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் பண்ணையாளர்களால் 11 ஆவது நாளாக தொடர்ச்சியாக வீதி ஓரங்களில் கொட்டும் மழையிலும், வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களின் கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும், ஆகவே, ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின்போது பாரிய அஹிம்சாவழிப் போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமானங்களுக்கான தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இல்லை

திரவ பால் கொள்முதலில் உள்ள ஏற்றத்தாழ்வை நீக்க நடவடிக்கை

மேலும் 706 பேர் பூரணமாக குணம்