உள்நாடு

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை அஸவெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு 25.11.2024 முதல் 02.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் நாட்டில் நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கரையோர வாழ் மக்கள் அவதானம்

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்