வகைப்படுத்தப்படாத

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது

(UTV | கொழும்பு) –

அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளவும். விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும்.

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையானவர்கள் ஆகிய 04 சமூகப் பிரிவுகளின் கீழ், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கப்படுவதுடன், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழமை போன்று உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களைக் கண்டறியும் வேலைத்திட்டத்தின் தரவு சேகரிப்புப் பணியில் 6728 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 3190 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 494 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், 205 கிராம உத்தியோகத்தர்களும், 1127 இதர உத்தியோகத்தர்களும், 1712 தற்காலிக ஆட்களும் அடங்குவர்.

பிரதேச அலுவலக மட்டத்தில், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் தரவுகளைக் கண்காணித்து, மாவட்டச் செயலாளரின் அனுமதியைப் பெற்ற பிறகு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாட்டில் குறைபாடுகள் காணப்படுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 10 ஆம் திகதி வரையில் நீடிப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன நேற்று (25) காலை அறிவித்துள்ளார்.

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஆகியோரும் இது தொடர்பில் தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பொருளாதார ஒத்துழைப்பு தேவைப்படும் நபர் அல்லது குடும்பம் இந்த நன்மையை இழந்திருந்தால்,இந்தக் காலப்பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக விசாரித்து அதனை சரிசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் அடிப்படை நோக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை தேவைப்படும் மக்களுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதே தவிர, வெறும் அரசியல் செயற்பாட்டின் அடிப்படையில் பல்வேறு தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதல்ல என அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பல்வேறு பிரசாரங்களாலும் தனிப்பட்ட அழுத்தங்களாலும் குழப்பமடையாமல், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெறாவிட்டாலோ அல்லது தகுதியில்லாத நபரின் பெயர் அதில் இடம் பெற்றிருந்தாலோ, பிரதேச செயலக அலுவலகங்களின் ஊடாக அது தொடர்பில் ஆராயுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் எந்த பிரச்சினையையும் பிரதேச செயலாளரின் ஊடாக தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Ship donated by China arrives in Colombo

අද පෙරවරුවේ විශේෂ පක්ෂ නායක රැස්වීමක්

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு