உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

அடுத்த வருடம் முதல் அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை சுமார் 4 இலட்சமாக அதிகரிக்குமாறும் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 24 இலட்சம் குடும்பங்கள் நிவாரணம் மற்றும் இதர கொடுப்பனவுகளை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுக்கு பொருத்தமான குடும்பங்களில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்த கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

மேலும், அஸ்வெசும விண்ணப்பங்களை கணணி மயமாக்கியதில் கடந்த முறை ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளை சரி செய்ய ஜனவரி முதல் புதிய விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் மூன்றாவது மரணமும் பதிவு

நாடளாவிய ரீதியான அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

அரசியல் அமைப்பில் இருந்தும் கூட அமுல்படுத்தப்படவில்லை – சிவாஜிலிங்கம்

editor