அரசியல்உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவுகளை தடையின்றி பெற்று கொள்ள ஏற்பாடு – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வழிகாட்டலுடன் மக்களுக்கு மேலும் நலன் சேர்க்கும் வகையில் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு பயனை அடைந்து கொள்ள முடிவதோடு அடையாள அட்டை இன்றி வங்கியில் முடக்கப்பட்ட பணத்தினை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக எமது மலையக மக்கள் பல்வேறு தடங்கல்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள்.

இக்கொடுப்பனவுகளை வங்கியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான உங்கள் பிரதேச, கிராம உத்தியோகத்தர் ஊடாக தற்காலிக அடையாள அட்டை ஒன்றை பெற்று கொள்வதன் மூலம் தடையின்றி பெற்று கொள்ள முடியும் என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்

Related posts

இதுவரை 2,564 பேர் குணமடைந்தனர்

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு