கேளிக்கை

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்

(UTV | இந்தியா) –  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், அடுத்ததாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ் \. இப்படம் மூலம் அவர் உலகளவில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூசோ தற்போது ‘தி கிரே மேன்’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு, அதே பெயரில் ஒரு திரைப்படத்தை இயக்குகின்றனர்.

இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தனுஷும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக, இப்படத்தை தயாரிக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரீது வர்மா காதல் திருமணம்

மீனாவுக்கு கொரோனாவாம்

எதிர்பார்ப்பை எகிற வைத்த துருவ நட்சத்திரம் டீசர்