சூடான செய்திகள் 1

அவுஸ்ரேலியா இலங்கை சுற்றுலா பயணத்திற்கென விடுத்திருந்த தடை நீக்கம்

(UTV|COLOMBO) அவுஸ்ரேலியா இலங்கைக்கு எதிராக விதித்திருந்த சுற்றுலாத்தடையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளது. இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரது சுற்றுலா ஆலோசனை அரசாங்கப் பக்கத்தில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து குறுகிய காலத்துக்கு அவுஸ்ரேலியா நாட்டவர் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதை தனிப்பட்ட பாதுகாப்பு விடயமாக செயற்படவேண்டும் என சுட்டிக்காட்டி இலங்கை சுற்றுப்பயணத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

முன்பள்ளிகளுக்கு விடுமுறை…

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு…