உலகம்

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து

(UTVNEWS | AUSTRALIA) –அவுஸ்திரேலியா புதர்த் தீ எதிரொலியாக தமது இந்தியப் பயணத்தை இரத்து செய்ய இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களில் புதர்த் தீ பற்றியெரிந்து வரும் சூழலில் ஸ்காட் மாரிசன் நாட்டை விட்டுச் செல்வது பொருத்தமானதாக இருக்குமா என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இம்மாதம் 13 ஆம் திகதி இந்தியா வரும் திட்டத்தை அவர் இரத்து செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் புதர்த்தீ பிரச்சினை நிலவும் போது, பிரதமர் ஸ்காட் மாரிசன் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related posts

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர்கள் பதவி நீக்கம்

ஆன் சான் சூ கீ இராணுவத்தினரால் கைது

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை!