உள்நாடு

அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்ட விசேட விமானம்

(UTV|கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் குழுவொன்றை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானமொன்று அவுஸ்திரேலியா மெல்போர்ன் நோக்கி பயணித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானநிலையத்தில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான UL 604 எனும் விமானம் இன்று காலை 7.30 அளவில் மெல்பர்ன் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ள பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்