உலகம்

அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை

(UTV|அவுஸ்திரேலியா)- .அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவித்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பினத்தவர் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!

உலகளவில் 7 இலட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை