உள்நாடு

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு

 (UTV | கொழும்பு) – அவன்காட் நிறுவனத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் சாட்சியளிப்பதற்காக முன்னாள் அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ச, பாட்டலி சம்பிக ரணவக்க , ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 18 பேருக்கு எதிர்வரும் எதிர்வரும் வியாழக்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவன்ட்காட் நிறுவனம் தன்னிச்சையாக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதாகவும், அதனால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்து அவன்ட்காட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய இவர்களுக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் 5 பேர் தவிர முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கமிலத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொலிஸ் பரிசோதகர் அலுத்கே செனரத், உதவி பொலிஸ் அதிகாரி லசந்த ரத்நாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்னாயக்க, வசந்த நவரத்ன பண்டார, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.ஏ.டீ.குணவர்தன, லெப்டினன் கமான்டர் டபிள்யு.எச்.பி.வீரசிங்க, ரியர் அத்மிரல் நிலந்த ஹீனட்டிகல, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, காலி துறைமுக பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துகத சில்வா, அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார உள்ளிட்டவர்களுக்கும் இவ்வாறு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வரலாற்றில் மிக உயர்ந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில்..

அரகலயவின் போது ஆயுதமேந்தாத பொதுமக்களை கொலை செய்வதற்கு நான் விரும்பவில்லை – சவேந்திர சில்வா

editor

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு