சூடான செய்திகள் 1

அவசர கால சட்ட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டது

(UTV|COLOMBO) பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டார்.

இதற்கமைய நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

கைக்குழந்தை சடலமாக மீட்பு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை