ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ மாணவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த நாட்டில் நிறுவப்பட்ட இரண்டாவது ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவபீடத்தின் பேராசிரியர் பிரிவை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல் மருத்துவ பீடத்தில் சுமார் 145 நான்காம் வருட கல்வியை கற்கும் மாணவர்கள் கல்வி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவப் கல்வி செயற்பாட்டில் நடுவே மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது ஆனால் இதுவரை குறிப்பிட்ட திட்டங்கள் நிறைவேறாதது பெரும் சிக்கலாக இருந்தது.
மஹரகம பற்சிகிச்சை சுகாதார நிறுவகத்தின் கலாநிதி ஜயதிஸ்ஸ ஸ்ரீ இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் பிரதிநிதிகள் பங்கேற்புடன். அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடல்களின் பலனாக பல் வைத்தியர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதில் உள்ள பிரச்சினைக்கு விரைவான தீர்வாக களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் மஹரகம பற்சிகிச்சை நிலையங்களில் முறைப்படி பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
அத்துடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் இணைந்த பல் மருத்துவ பீட மாணவர்களுக்கான நிரந்தர பல் மருத்துவ பேராசிரியர் பிரிவு ஒன்றை மஹரகம வளாகத்தில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முறையாக ஆரம்பிக்கப்பட்ட பல் மருத்துவ பீடத்தை முழுமையான மருத்துவ பீடமாக மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்களான வத்சலா பிரியதர்ஷனி சாமிக்க கமகே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பிரதி பணிப்பாளர் நாயகம் (பல் சேவைகள்) டொக்டர் சந்தன கஜதீர ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பத்மலால் பேராசிரியர். சுரங்கி ஜி.யசவர்தன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஹேமந்த அமரசிங்க மஹரகம பல் மருத்துவ நிலையத்தின் மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் மனோஜ் ஜயகொடி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.