கிசு கிசு

அழைப்பினை புறக்கணித்தார் நாமல் ராஜபக்ஷ

(UTV | கொழும்பு) –   விளையாட்டுத்துறையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வெற்றிக்காக முன்னாள் விளையாட்டு அமைச்சர்களின் அனுபவத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த சந்திப்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவில்லை.

இந்த சந்திப்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜீவன் குமாரணதுங்க, காமினி லொகுகே, மஹிந்தானந்த அளுத்கமகே, நவீன் திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, பைசர் முஸ்தபா, ஹரின் பெர்னாண்டோ மற்றும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

திரையரங்குகளில் திரைப்பட காட்சிகளுக்கு ரத்து…

மஹிந்த வைத்தியசாலையிலா

ஜூன் 28 வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுமா?