தரம் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இராஜகிரியவில் உள்ள தேசிய ஆயுர்வேத வைத்தியசாலையில் ஆயுர்வேத முறைமைக் குழுவிற்கான புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆயுர்வேத அழகு சாதனப் பொருட்களுடன் தொடர்புடைய சருமம் பாதிப்பு மற்றம் சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இவற்றை கட்டுப்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு காலம் எடுக்கும்.
ஆயுர்வேதத்தின் பல்வேறு சேர்மானங்களை கூறி பல அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
எனவே இந்த தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துவது பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.