உள்நாடு

அளுத்கமவில் மூன்று மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து

அளுத்கம பகுதியில் வீடு ஒன்றும், அதனுடன் இணைந்த மூன்று மாடி வர்த்தக கட்டிடமும் இன்று வெள்ளிக்கிழமை (18) தீப்பிடித்து எரிந்துள்ளது.

அளுத்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பற்றிய கட்டிடத்தில் தங்க ஆபரண கடை மற்றும் மர வேலைப்பாடுகள் விற்பனை செய்யப்படும் கடை ஒன்றும் காணப்பட்டுள்ளது.

சம்பவ நேரத்தில் கடையில் ஒரே ஒரு ஊழியர் மட்டுமே இருந்ததுடன், இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பற்றியமைக்கான காரணத்தை கண்டறிய மின்சார சபையின் அதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்புப் பரிசோதகர்கள் ஆகியோரை அழைத்து மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எலி காய்ச்சல் நோய் என சந்தேகம் – 23 வயது இளைஞன் உயிரிழப்பு

editor

எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றம் சென்றார்

editor