உள்நாடு

அலோசியஸிற்கு மீண்டும் மதுபான உரிமம்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அர்ஜுன அலோசியஸுக்கு சொந்தமான டபிள்யூ. எம். மென்டிஸ் மற்றும் அதன் நிறுவனத்திற்கு கலால் திணைக்களம் மீண்டும் உரிமங்களை வழங்கியுள்ளது.

மெண்டிஸ் நிறுவனத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட மூன்று உரிமங்களில் இரண்டு உரிமங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய உரிமத்தை எதிர்காலத்தில் வழங்க முடியுமா என்பது குறித்து திணைக்களம் பரிசீலித்து வருவதாகவும் கலால் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

2021 ஜூன் 01 அன்று டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் அதன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்திருந்தது. குறித்த நிறுவனம் 2018 ஆம் ஆண்டில், அரசாங்கத்திற்கு 1.5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரியைச் செலுத்தத் தவறியதன் காரணமாக, மெண்டிஸ் மற்றும் அதன் நிறுவனம் வைத்திருந்த மதுபான உற்பத்தி உரிமத்தை கலால் திணைக்களம் இரத்துச் செய்தது.

இரத்து செய்யப்பட்ட உரிமம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்குள் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தும் ஒப்பந்தத்தின் பேரில் கலால் திணைக்களத்தால் உரிமம் மீண்டும் வழங்கப்பட்டது.

Related posts

மேலும் 986 பேர் கைது!

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

துமிந்தவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு