உள்நாடு

அலுவலக ரயில்கள் திங்கள் முதல் சேவையில்

(UTV|கொவிட்-19)- எதிர்வரும் 20ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

சுகாதார தரப்பினர் விடுத்துள்ள ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் பணியாளர்கள் மாத்திரம் குறித்த ரயில் சேவையில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற மாவட்டங்களிலுள்ள ரயில் நிலையங்களில் மக்கள் உள்நுழைவதற்கு அல்லது வெளியேறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

செலவின வரம்புகள் மீறப்பட்டால், நிறுவன தலைவர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கைது

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !