கிசு கிசுசூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

(UTV|COLOMBO) எதிர்வரும் வாரத்திற்குள் அலுகோசு பதவிக்காக முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்ட நபர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அண்மையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு 30 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அலுகோசு பதவிக்காக இரண்டு பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

எதிர்வரும் 14 மற்றும் 15ம் திகதிகளில் இந்த வைத்திய பரிசோதனை இடம்பெற உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

அவர்களுக்கு விஷேட பயிற்சி வழங்கப்பட்டதன் பின் அந்த சேவையில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.

Related posts

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 61.4 மில்லியன் ரூபா இலாபம்

சிறுபான்மை மதஸ்தானங்கள் மீதான வன்முறை சம்பவங்கள்

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் – பிரதமர் சந்திப்பு