சூடான செய்திகள் 1

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் 05ம் திகதி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் 05ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு வழங்குவதற்கு காலம் தேவை என்று அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

அதேநேரம் மேலும் 07 சாட்சியாளர்களை புதிதாக வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதி வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம் ஆவணங்கள் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதா என்று பரிசீலிப்பதற்காக வழக்கை டிசம்பர் மாதம் 05ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.

 

 

 

 

Related posts

உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது இலங்கை

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்