உள்நாடு

அலவி மௌலானா சனசமூக நிலையத்தை ஆக்கிரமித்துபுத்தர் சிலை வைப்பு!

(UTV | கொழும்பு) –

மரு­தானை ஆர்னோல்ட் மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் அமைச்­சரும் மேல்­மா­காண ஆளு­ந­ரு­மான அலவி மெள­லானா நினைவு சன­ச­மூக நிலை­யத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் வகையில் புத்தர் சிலை­யொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­ற­மைக்கு அப்­ப­குதி மக்கள் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

கொழும்பு மாந­கர சபை சுது­வெல்ல வட்­டார ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைப்­பா­ள­ரான கித்­­சிறி ராஜ­பக்ஷ பல­வந்­த­மாக அலவி மெள­லானா சன­ச­மூ­க நிலை­யத்­துக்கு முன்னால் புத்தர் சிலையை நிர்­மா­ணித்து வரு­வ­தாக இப்­ப­­குதி மக்கள் கொழும்பு மாந­கர சபைக்கு முறைப்­பாடு செய்­துள்­ளனர். ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் முன்னாள் தொழில் அமைச்சர் அலவி மெள­லானா நினை­வாக அவர் வாழ்ந்த சுது­­வெல்ல பகு­தியில் குறிப்­­பிட்ட சன­ச­மூக நிலையம் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­து.

மரு­தானை ஆர்னோல்ட் மாவத்­தையில் வாழும் மக்­களில் பெரும்­பான்­மை­யினர் முஸ்லிம்­க­ளாவர். இங்கு புத்தர் சிலை நிறு­வப்­ப­டு­வது இன நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக அமையும் எனக் கூறப்­ப­டு­கி­ற­து. இவ்­வி­வ­காரம் தொடர்பில் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­துள்­ளார். அவர் ஜனா­தி­ப­திக்கு கடிதம ஒன்­றி­னையும் அனுப்பி வைத்­துள்­ளார். கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது சுது­வெல்ல மாந­கர சபை வட்­டா­ரத்தில் அமைந்­துள்ள அலவி மெள­லானா சன­ச­மூக நிலையம் உங்­க­ளது அமைப்­பா­ளரால் சட்­ட­வி­ரோ­த­மாக பலாத்­கா­ர­மாக கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு நிர்­மாணம் நடை­பெ­று­கி­ற­து.

இப்­ப­கு­தியில் வாழும் குறைந்த வரு­மானம் பெறு­ப­வர்­களின் வரி நிதியில் இந்த சன­ச­மூக நிலையம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு அலவி மெள­லா­னாவின் பெயர் பொறிக்­கப்­பட்­டது. மக்­களின் பயன்­பாட்டில் இருந்த இந்த நிலையம் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­து.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் கொழும்பு மாந­கர சபையின் ஆணை­யாளர் உட்­பட அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்டும் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்­லை.உங்கள் அதி­கா­ரத்தை சம்­பந்­தப்­பட்ட அமைப்­பாளர் உப­யோ­கித்து சட்டவிரோத நிர்­மா­ணத்தை நிறுத்­து­வ­தி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருக்­கிறார். எனவே உட­ன­டி­யாக இந்த சட்­ட­வி­ரோத நிர்­மா­ணத்தை நிறுத்தி குறைந்த வரு­மானம் பெறும் மக்­களின் பாவ­னைக்கு சன­ச­மூக நிலை­யத்தை வழங்க ஏற்­பாடு செய்­யு­மாறு வேண்டிக் கொள்­கிறேன். என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கடி­தத்தின் பிரதி எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­து.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைத்தொலைபேசியை பார்த்து பேரூந்து ஓட்டும் சாரதி!

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அரசின் ஊழல்களை கட்டவிழ்த்தார் அநுர