உள்நாடு

அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது.

(UTV | கொழும்பு) –   அலரி மாளிகை வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர்கள் பொரலஸ்கமுவ தல்கஸ் வஸ்த பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் மற்றும் வத்தளை ஹெக்கித்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை ஒத்திவைப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668