உள்நாடு

அலரி மாளிகைக்கு அருகில் மீள திறக்கப்பட்ட வீதியின் பாதுகாப்பு சாவடிகள் அகற்றம்

அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொட்டுண்டா சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் வீதி பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, வீதியின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு சாவடிகள் கொழும்பு மாநகரசபையால் அகற்றப்பட்டன.

கடந்த 2005ம் ஆண்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வீதி 19 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக பயணிக்க முடியாத நிலையில் காணப்பட்ட இந்த வீதியை தற்போதைய பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்த பின்னர் மீண்டும் திறக்குமாறு புதிய அரசாங்கம் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

மேலும் 281 பேர் நோயில் இருந்து மீண்டனர்

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி