உள்நாடு

அறுவை சிகிச்சையின் போது யுவதி ஒருவர் மரணம் : சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரிக்கை

(UTV | கொழும்பு) – புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற திருமணமான பெண் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்தமை தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.

இலக்கம் 199/A, தெலத்துர, ஜா-எல பிரதேசத்தில் புத்திகா ஹர்ஷனி தர்மவிக்ரம என்ற இளம் திருமணமான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலைக்கு அறிக்கை கோரியுள்ளது.

மேலும் பித்தப்பையில் கற்கள் இருந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 31ஆம் திகதி வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட பிழை காரணமாக மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

ராகம வைத்தியசாலையில் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 25ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வத்தளை தனியார் வைத்தியசாலையில் உரிய பராமரிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையினால் தனது சகோதரி மிகவும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருமணமாகி ஒரு மாதமும் சில நாட்களும் ஆன நிலையில், துரதிஷ்டவசமாக இறந்துள்ளார்.

Related posts

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor