உள்நாடு

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி

(UTV | கொழும்பு) –  அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவமொன்று, இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்ட ரயில் ஒன்று, யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கூட்டமாக தண்டவாளத்தில் பயணித்த மாடுகளை மோதியுள்ளது.

சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

Related posts

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு

மேல் மாகாணத்திற்கு தனிமைப்படுத்தல் ஊரங்கு