உள்நாடு

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!

(UTV | கொழும்பு) –

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அமெரிக்க விஜயத்தின் போது மேற்கொண்ட முக்கிய நிகழ்வுகளில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு விஜயத்தில் ஜனாதிபதியுடன் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் ஜனாதிபதியின் முக்கிய சந்திப்புகளில் கலந்துள்ளதை புகைப்படங்களின் மூலம் காணமுடிகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி விக்ரமசிங்க சந்தித்த போது காணப்பட்டார். இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ருவான் விஜேவர்தன, ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வொன்றின் புகைப்படத்தில் இருப்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் பிரேம்நாத் தொலவத்த மற்றும் தற்போது அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் எஸ்.எம்.எம்.முஸ்ஸாரப் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 2 பேர் பூரணமாக குணமடைந்தனர்

ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர் – ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன

editor

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது – சிங்கப்பூரின் சட்ட அதிகாரிகள் தெரிவிப்பு

editor